வரி அறவீட்டை தவிர வேறு மாற்று வழிகள் கிடையாது: ரஞ்சித் சியம்பலாபிட்டிய
வரி அறவீடு செய்வதனை தவிர வேறு மாற்று வழிகள் எதுவும் கிடையாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
40 இலட்ச குடும்பங்களுக்கான நிவாரணங்கள்
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வாழ் மொத்த குடும்பங்களான 69 லட்சம் குடும்பங்களில் 40 இலட்சம் குடும்பங்கள் நிவாரணங்களை கோரி நிற்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரி அறவீடு

இவ்வாறு குறித்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டுமாயின் வரி அறவீடு செய்வதனை தவிர வேறு வழியில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உணவு பணவீக்கம் நூற்றுக்கு நூறு வீதம் காணப்படும் நிலையில் நாணயத் தாள்களை அச்சிடுவது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும், அதற்கு ஒரே மாற்று வழி வரி அறவீடு செய்தலேயாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டாலும் தற்பொழுது புரிதலுடன் வரி செலுத்துகை மிகவும் அத்தியாவசியமானது என ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.