மாற்று திறனாளிகளுக்கும் தடுப்பூசி விநியோகத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்! - சஜித்
மாற்று திறனாளிகளுக்கும் தடுப்பூசி விநியோகத்தின் போது முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கோவிட் காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஊனமுற்றவர்கள் மற்றும் விசேட தேவைகளை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் போது முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு தரப்பினரும் தடுப்பூசி தொடர்பான முன்னுரிமைப் பட்டியலில் தங்களுக்கு இடம் கோரி வரும் நிலையில் ஊனமுற்றவர்கள் மற்றும் விசேட தேவை உடையவாகள் இந்த பட்டியலில் இணைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2012ம் ஆண்டு நடாத்தப்பட்ட மதிப்பீட்டின் பிரகாரம் நாட்டில் 1.7 மில்லியன் பேர் விசேட தேவையடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானவர்களில் பெரும்பான்மையானவர்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் நெருக்கடி நிலையில் தற்போது இருக்கின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் கட்டுப்பாடு கடுயைமான அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது எனவும் வாழ்வதற்கும் சாவதற்குமான உரிமை கட்சி ரீதியில் தீர்மானிக்கப்படும் துரதிஸ்டவசமான ஓர் சூழ்நிலை உருவாகியு;ளளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam