வெள்ள அனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாக்க மாற்றுத்திட்டம்: அமைச்சர் டக்ளஸ் உறுதி
வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மாற்றுத்திட்டமொன்றை வகுத்து புதிய வீட்டுத் திட்டத்துடன் கூடிய காணிகளை வழங்குவது தொடர்பில் ஆராயவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மக்கள் முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப பாடசாலை மற்றும் கண்டாவளை மாகாவித்தியாலயம் ஆகியவற்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பெரும் அழிவுகள்
இந்நிலையில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்ட போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில் பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நடவடிக்கை எடுப்பேன்.
வெள்ள அனர்த்த பாதிப்பு குறைவடைந்த பின்னர் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் வீடுகளுக்கு
செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மழை வெள்ளத்தை முகாமைத்துவம் சரியாக இல்லாமையால் வருடாவருடம் பெரும் அழிவுகள் ஏற்பட்டு வருவதாக விவசாய மக்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அத்துடன் கிளிநொச்சியில் தற்பொழுது பெய்துவரும் தொடர் மழை காரணமாக இரணைமடு
பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு
உட்பட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள், இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.
மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால், அக்கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan
