வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களுக்கு மாற்று வீடுகளை வழங்க வேண்டும் - மோகன்ராஜன் வலியுறுத்தல்
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் வாழ்ந்து வந்த வீடுகளிலிருந்து நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட ஆறு குடும்பங்களுக்கு, அரசாங்கம் உடனடியாக மாற்று வீடுகள் அல்லது பொருத்தமான காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்தரணி எஸ். மோகன்ராஜன் வலியுறுத்தியுள்ளார்.
நுவரெலியா மாவட்டம், வலப்பனை பிரதேசத்திற்குட்பட்ட ஹல்கரனோயா – சென்லெனால்ட்ஸ் தோட்டத்தில் வசித்து வந்த ஆறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 40 பேர், வலப்பனை நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய பிஸ்கல் அதிகாரிகள் ஊடாக அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காணி சீர்திருத்த ஆணைக்குழு
இந்தச் சம்பவம் தொடர்பில் தனது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி எஸ். மோகன்ராஜன்,

நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கும் அதேவேளை பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்காலம் தொடர்பில் அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து விலக முடியாது.
வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் அரச காணிகளின் உடமைகளை மீளப் பெற்றுக்கொள்ளும் சட்ட ஏற்பாடுகளின் கீழ், காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பின் அடிப்படையிலேயே இந்த வெளியேற்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பு
நீதிமன்றத் தீர்ப்பை பிஸ்கல் அதிகாரிகள் நடைமுறைப்படுத்தியுள்ளனர். நீதிமன்றத் தீர்ப்பு என்ற அடிப்படையில் அதற்கு எதிராக நாம் செயற்பட முடியாது.

நீதித்துறையின் தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உள்ளது. குறித்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தமது தரப்பு வாதங்களை முன்வைத்திருந்ததது.
தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் மேலாய்வு விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. எனினும், அந்த விண்ணப்பம் மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட நிலையில், நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.'
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri