யாழில் மேர்வின் சில்வாவை கைது செய்ய கோரி முறைப்பாடு (video)
தமிழர்களுக்கு எதிராக கடுமையான வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்ட மேர்வின் சில்வாவிற்கு எதிராக பல தரப்பினர் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் , மேர்வின் சில்வாவின் கருத்திற்கு எதிராக அவரை கைது செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டை இன்று (16.08.2023) வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிகையில்,
"வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள விகாரைகளில் கை வைத்தால் அப்படிச் செய்யும் தமிழர்களின் தலைகளுடன் களனிக்கு வரவேண்டியேற்படுமென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் தெரிவித்திருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேலியகொடையில் இடம்பெற்ற அரசியல் கூட்டமொன்றில் உரையாற்றிய போதே, மேர்வின் சில்வா மேற்கண்டவாறு கூறியிருந்தார். இது மிகவும் கண்டனத்துக்குறிய கருத்து" என தெரிவித்துள்ளார்.



