புதிய அரசியல் அணியை உருவாக்கும் முனைப்புக்களில் மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அரசியல் அணியொன்றை உருவாக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளார்.
நாட்டில் அரசியலில் ஈடுபட்டுள்ள நேர்மையான, ஊழல் மோசடிகளற்ற, நாட்டை நேசிக்கும் நபர்களை ஒன்றிணைத்து விரிவான அரசியல் சக்தியொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாறான ஓர் சக்தியை உருவாக்கி அதன் மூலம் நாட்டின் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாட்டில் நிலவும் உரப்பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை, எரிவாயு மற்றும் பொருட்களின் விலை உயர்வு போன்ற விடயங்கள் குறித்து ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தாது அரசாங்கம் தனது கடமைகளை செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு மக்கள் இன்னமும் உரம் கிடைக்காது அவதியுறுகின்றனர்.நாட்டின் பல பகுதிகளிலும் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டுமெனவும், மக்களுக்காக அரசாங்கம் தனது கடமைகயை செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான பூரண ஒத்துழைப்பினை வழங்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 22 மணி நேரம் முன்
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri