நீலாவணை மதுபானசாலை தொர்பில் கோடீஸ்வரன் எம்.பி விசேட கோரிக்கை
கல்முனை நீலாவணையிலே மக்களை பாதிக்கின்ற மதுபானசாலை அமைப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றில இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
“விசேடமாக க்ளீன் ஸ்ரீலங்காவின் ஊடாக இந்த நாட்டை சிறப்பாக நடத்துவதற்காக முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் என்னாலான அனைத்து ஒத்துழைப்பையும் நான் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றேன்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக, நீலாவணை பொதுமக்கள் ஒன்றுகூடி கிட்டத்தட்ட 500 பேருக்கு மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
மதுபானசாலையை ஒழிப்பதற்காக க்ளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்திற்கான ஒரு முன்னேற்பாடாக இந்த ஆர்ப்பாட்டத்தை மக்கள் முன்னெடுக்கின்றனர்.
இந்த மதுபானசாலை அமைக்கப்படும் என்றால் பாடசாலை மாணவர்கள், அதேபோல் அங்கே உழைக்கின்ற உழைத்து அன்றாடக் கூலி வேலை செய்கின்ற மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்ற சூழ்நிலை ஏற்படும்.
மக்களின் ஆர்ப்பாட்டம்
கடந்த 3 மாதத்துக்கு முன் நீலாவணையிலே அந்த மதுபானசாலை திறக்கப்பட்டிருந்தது. மக்களின் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக மக்கள் எதிர்ப்பு செய்ததன் காரணமாக அது மூடப்பட்டிருந்தது.
ஆனால் தற்பொழுது அதனை திறப்பதற்காக அதன் முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருக் கின்றார்கள்.
ஆகவே, அந்த மக்கள் மதுபானசாலையை இல்லாமல் செய்வதற்காக கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையிலே ஆர்ப்பாட்டம் செய்கின்ற நிலையில், அவர்களுக்குரிய ஒத்துழைப்பை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும்’’ என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |