துணைவேந்தர் இல்லாமல் இலங்கையில் நான்கு பல்கலைக்கழகங்கள்

Ministry of Education Eastern University of Sri Lanka South Eastern University of Sri Lanka
By Theepan Jan 22, 2025 08:37 AM GMT
Report

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தராகக் கலாநிதி த.பிரபாகரன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது நியமனத்துடன் இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கத்தின் பதவிக் காலம் நேற்று - ஜனவரி 21 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், துணைவேந்தரின் கடமைகளை ஆற்றுவதற்கு பதில் பிரதித் துணைவேந்தர் கலாநிதி தம்பிராஜா பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

துணைவேந்தர் பதவிக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பங்களை மதிப்பீடு செய்த பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள் கடந்த வருடம் ஒக்ரோபர் 15 ஆம் திகதி புள்ளிகளை வழங்கினர்.

நாடாளுமன்ற வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்ட ஆளும் தரப்பு அமைச்சரின் பட்டம்!

நாடாளுமன்ற வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்ட ஆளும் தரப்பு அமைச்சரின் பட்டம்!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

அவற்றின் அடிப்படையில், முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் முதல் நிலையிலும், சுகநல விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன், விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களையும் பெற்றிருந்தனர்.

துணைவேந்தர் இல்லாமல் இலங்கையில் நான்கு பல்கலைக்கழகங்கள் | Four Universities In Sl Without A Vice Chancellor

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கையின் படி, புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களின் விபரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

பல்கலைக் கழகச் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரைத் துணைவேந்தராக ஜனாதிபதி தெரிவு செய்து, நியமனம் செய்வது வழமையாக இருந்து வந்தது.

எனினும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகா பதவிக்கு வந்த பின்னர், ஜனாதிபதியினால் பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில், துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவுற்ற பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவே பதில் துணைவேந்தர்களை நியமித்துள்ளது.

நீதிமன்றை அரசியல் மயப்படுத்த முயற்சிக்கும் அரசாங்கம்! நாமல் காட்டம்

நீதிமன்றை அரசியல் மயப்படுத்த முயற்சிக்கும் அரசாங்கம்! நாமல் காட்டம்

பதில் துணைவேந்தர்

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜீ.ஏ.எஸ். ஹினிகதரவின் பதவிக்காலம் கடந்த மாதத்துடன் நிறைவடைந்துள்ள நிலையில், கலாநிதி ஜானக புஸ்பகுமார பதில் துணைவேந்தராகக் கடமையாற்றி வருகிறார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஏ.ரமீஸின் பதவிக்காலம் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் கலாநிதி ஜானக புஸ்பகுமார பதில் துணைவேந்தராகக் கடமையாற்றி வருகிறார்.

ருஹுண பல்கலைக்கழகத்தில் இயல்புநிலை பாதிப்புக்குள்ளாகியதை அடுத்து, பல்கலைக்கழகச் சட்டத்தின் படி கல்வி அமைச்சருக்குள்ள தத்துவத்தின் அடிப்படையில், முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவின் பதவி வறிதாக்கப்பட்டு அவரது கடமைகளை ஆற்றுவதற்கெனத் தகுதி வாய்ந்த அதிகாரியாக ஆர்.எம்.யூ.எஸ்.கே.ரத்நாயக்க பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தராகக் கலாநிதி தம்பிராஜா பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

செந்தில் தொண்டமான் - வடிவேல் சுரேசுக்கு எதிராக ஆளும் தரப்பு நடவடிக்கை

செந்தில் தொண்டமான் - வடிவேல் சுரேசுக்கு எதிராக ஆளும் தரப்பு நடவடிக்கை

ஜனாதிபதி செயலக தகவல்

கிழக்குப் பல்கலைக்கழகத்துடன், இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

துணைவேந்தர் இல்லாமல் இலங்கையில் நான்கு பல்கலைக்கழகங்கள் | Four Universities In Sl Without A Vice Chancellor

இதே நேரம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டிருந்த தகைசார் பேராசிரியர் சி.பத்மநாதனின் பதவிக்காலமும் நிறைவடைந்துள்ள நிலையில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் நியமனம் குறித்தும் ஜனாதிபதி செயலகத்தினால் எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பில் இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையை மாற்றுவது குறித்து அரச உயர்மட்டத்தில் ஆராயப்படுவதனாலேயே இந்த இழுபறி நிலை காணப்படுவதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US