விமான நிலைய நாய்களை காடுகள் மற்றும் குப்பைக் கிடங்குகளில் கைவிடுவதாக குற்றச்சாட்டு
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஆகிய பகுதிகளில் இருந்து பிடிக்கப்படும் நாய்கள் வீரவில், தனமல்வில காடுகள் மற்றும் கெரவலப்பிட்டிய குப்பைக் கிடங்கில் விடப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விலங்கு நல அமைப்பு சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் விமான நிலைய அதிகாரிகளிடம் தகவல் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோரிக்கை
தாய்நாய் ஒன்று தனது ஐந்து குட்டிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு கெரவலப்பிட்டிய குப்பைக் கிடங்கில் கைவிடப்பட்டதாகவும், பின்னர் அவை மீட்கப்பட்டதாகவும் அமைப்பு தெரிவித்துள்ளது.

விமானப் பாதுகாப்புக்காக விமான நிலையப் பகுதிகளில் நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை ஏற்றுக்கொண்டுள்ள அமைப்பு, அவற்றைக் காடுகளில் கைவிடுவதற்குப் பதிலாக வேலிகளைப் பலப்படுத்துதல், சிசிரிவி கண்காணிப்பு, கருத்தடை மற்றும் தடுப்பூசி திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
நாய்களை, குறித்த இடங்களில் விடும் நடவடிக்கை நிறுத்தப்பட்டதை ஏழு நாட்களுக்குள் எழுத்துமூலம் உறுதிப்படுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.