பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மீது கடுமையான குற்றச்சாட்டு முன்வைப்பு
பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வின்சன் டி போல் டக்களஸ் மீது பருத்தித்துறை முனை கடற்றொழலாளர் கூட்டுறவுச் சங்கத்தினர் மிக கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
நேற்று(12) இரவு அவசர ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தி இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
இதன்போது சங்கத்தினர் கருத்து தெரிவ்க்கையில், கடற்கரையோரங்களில் தூர்வாரும் நடவடிக்கையினை மேற்கொண்டு வெளியேற்றப்பட்ட மண்ணை தனது தனிப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நிரவும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
குற்றச்சாட்டு
தனது சொந்த தேவைக்காக பயன்படுத்தும் வாகனத்தரிப்பிடத்தை அமைப்பதற்கும் தனது உறவினர்களின் வாழ்விடங்களில் உள்ள தாழ் நிலங்களை நிரவும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்தனர்.
மேலும் முன்னாள் தலைவர் அன்ரனி எட்வேட் ஹைரஸ் கருத்துத் தெரிவிக்கையில் இந்திய கடற்றொழிலாளர்களின் வருகை மிக மோசமாக காணப்படுகிறது.
வெளிச்சம் பாச்சி எமது பகுதிகளிலேயே சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர் . இவர்களை கைது செய்ய வேண்டும் கைப்பற்றும் படகுகளை எமது கடற்பகுதியில் மூழ்கடித்து மீன்வளத்தைப் பெருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

TRP-வில் புதிய உச்சத்தை தொட்ட எதிர்நீச்சல் சீரியல்.. இதுவரை இவ்வளவு ரேட்டிங் வந்ததே இல்லை Cineulagam
