மின்சார திருத்த சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு : மறுப்பு தெரிவித்த அமைச்சர்
பொதுமக்களின் ஆட்சேபனைக்கு அவகாசம் வழங்காமல்,மின்சாரத் திருத்தச் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தும் மோசமான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக எதிர்கட்சி அரசியல் கட்சிகள் கூறுவதை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர மறுத்துள்ளார்.
இந்தநிலையில் உத்தேச சட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கால அவகாசம் கிடைக்கும்
இந்த உத்தேச சட்டமூலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் எனவும், அதன்பின்னர் பொதுமக்களுக்கான ஆட்சேபனைகளுக்கு வாய்ப்பு வழங்காமல் சட்டம் தானாகவே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சந்தேகத்தை எழுப்பியிருந்தார். எனினும் இந்த குற்றச்சாட்டை அமைச்சர் மறுத்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரியிலேயே சட்டமூலம் தாக்கல் செய்யப்படும் எனவும் அதனை யார் வேண்டுமானாலும் ஆட்சேபிக்க கால அவகாசம் கிடைக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
