அலி சப்ரி ரஹீம் மீது புதிய குற்றச்சாட்டு: சட்ட நடவடிக்கைக்கு தயாராகுமாறு எச்சரிக்கை
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அரசாங்கத்திற்கு சொந்தமான 214 ஏக்கர் காணியை பல வருடங்களாக சட்டவிரோதமாக பயன்படுத்தி வந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் இது குறித்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அந்த நிலத்தை தனியார் நிறுவனம் ஒன்று உப்பு உற்பத்திக்காக பயன்படுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
எவ்வாறாயினும், சுமார் 14 வருடங்களாக இந்தக் காணியிலிருந்து அரசாங்கத்திற்கு வரி செலுத்தப்படாமையால் சுமார் 20 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் தெரியவந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்தி, அது தொடர்பில் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படும் என புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிந்தக மாயதுன்ன தெரிவித்துள்ளார்.
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam