வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள்: சஜித் தரப்பிலிருந்து மற்றுமொரு குற்றச்சாட்டு
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
அவசியமானால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று (22.09.2024) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில், பேசியபோது, சில வாக்கு எண்ணும் மையங்களில் தமது கட்சியின் முகவர்கள் இன்றி இரண்டாவது எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
கட்சியின் முகவர்கள்
தமது கட்சி முகவர்கள் முன்னிலையில் இரண்டாவது எண்ணிக்கை நடக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், வாக்கு எண்ணும் மையங்களுக்குள் தமது கட்சியின் முகவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
