எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்படுகின்றதா இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்..! எழும் குற்றச்சாட்டு
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எதிர்க்கட்சி சார்பாகவே நடந்து கொள்கின்றது என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது நிலுவையிலுள்ள வழக்குகளை முடித்துக் கொள்வதற்காகவே ஜனாதிபதி, நீதிபதிகளின் வயது எல்லையை அதிகரிக்க வேண்டும் என தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார்.
கடந்த காலங்களில் இருந்த ஆட்சியாளர்கள் போன்று நடந்துக் கொள்ளாமல், மக்களின் கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் பதிலடிக் கொடுக்கும் வகையில், ஜனாதிபதி தற்போது நடந்துக் கொள்கிறார்.
எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கொண்டு தான், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவிடாமல் மறுப்பு தெரிவிக்கின்றது என்றார்.