ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்தால் நாட்டில் காட்டு சட்ட நடைமுறையே தலைதூக்கும்: பிரசன்ன எச்சரிக்கை
ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்தால் நாட்டில் காட்டுத் சட்ட உருவாக்கம் மீண்டும் ஏற்பட்டுவிடும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நேற்று(08) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
பயங்கரமான சகாப்தம்
“தாம் ஆட்சிக்கு வந்தால் தமது கட்சியினருக்கு சில நீதி அதிகாரங்களை வழங்குவோம் என ஜே.வி.பி.யினர் தெரிவித்த கூற்று 1988/89 காலப்பகுதியில் ஜே.வி.பி மக்களைக் கொன்று கிராமங்களில் காட்டுச் சட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்தியது என்பதை மீண்டும் மக்களுக்கு நன்றாக நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
குறித்த காலத்தில் ஜே.வி.பி அவ்வாறான சட்டத்தைக் கொண்டு வந்து அப்பாவி மக்களின் கை, கால்களை வெட்டி கொலை செய்தது.
அந்த குழுக்களுக்கு மீண்டும் அதிகாரத்தை கொடுத்தால், அந்த பயங்கரமான சகாப்தம் மீண்டும் பிறக்கும். இன்னும் இரண்டு வருடங்களுக்கு தேர்தல் இல்லாமல் இப்படியே இருப்போம் என்று மக்கள் கூறுகிறார்கள்.
ஆனால் அரசியலமைப்பு சட்டப்படி அவ்வாறு செய்ய முடியாது. எனவே, குறிப்பிட்ட நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்.
இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கக்கூடிய ஒரு தலைவரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவது மக்களின் பொறுப்பு என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
தொலைநோக்கு பார்வை இல்லாதவர்களுக்கு நாட்டின் நிர்வாகத்தை கொடுக்காதீர்கள்' என எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |