யாழ்.தீவகத்தில் அதிரடியாக களமிறங்கியுள்ள பொலிஸ் அதிகாரி வினோத்
இன்று(10.2.2026) அதிகாலை 1.18 மணியளவில் யாழ். மண்டைதீவு பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த சிறுவன் சென்ற வாகனத்தை பொலிஸார் வழிமறித்த போது அனுமதியை மீறிச் சென்ற காரணத்தால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையிலே, குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவானது தனது நிலைப்பாட்டை தெரிவித்து இருந்தது.
அதேவேளை, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தாரால் இது திட்டமிட்ட படுகொலை என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பில் சட்ட ஒழுங்கில் சிக்கல் இருக்கின்றதா அல்லது குறித்த சிறுவன் சிக்கலுக்கு உரியவரா, அல்லது பொலிஸார் தமது கடமைகளை தவறாக பயன்படுத்தினார்களா என்ற கோணத்தில் தான் இந்த விவகாரம் பார்க்கப்பட வேண்டி இருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் பல உண்மைத் தகவல்களுடன் வருகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,