மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய திணைக்களம்: தரித்து நிற்கும் தொடருந்துகள்
முல்லைத்தீவு - மாங்குளம் தொடருந்து நிலையத்தில் அனைத்து தொடருந்துகளும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் திணைக்களத்தால் நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல் கடுகதி தொடருந்து (21.10.2023) காலை 11 மணிக்கு நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மக்களினால் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பலதரப்பட்டவர்களின் முயற்சியினால் தற்போது இந்த விடையம் சாத்தியமாகியது.
தொடருந்து நேர அட்டவணை
திணைக்களத்தால் வெளியிடப்பட்ட நேர அட்டவணைப்படி, கொழும்பு கோட்டையில் இருந்து 05.10 க்கு புறப்படும் குளிரூட்டப்பட்ட கடுகதி தொடருந்து 10.45 க்கு மாங்குளத்தை வந்தடைவதோடு காங்கேசன்துறை நோக்கி புறப்படும் ( ஒவ்வொரு சனிக்கிழமைகளில்) யாழ் நிலா இரவு 22.00 மணிக்கு புறப்பட்டு மாங்குளத்திற்கு அதிகாலை 4.20 க்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காங்கேசன்துறையில் இருந்து (வெள்ளிக்கிழமை மட்டும்) மதியம் 1.15 க்கு புறப்படும் குளிரூட்டிய கடுகதி தொடருந்து மாங்குளத்திற்கு 14.54 ற்கு வந்தடைந்தடைவதோடு கொழும்பை நோக்கி செல்லும் (ஞாயிறு மட்டும்) யாழ்நிலா தொடருந்து காங்கேசன்துறையில் இருந்து இரவு 21.30 க்கு புறப்பட்டு மாங்குளத்திற்கு இரவு 23.20 க்கு வந்தடைந்ததுடன் கொழும்பு நோக்கி செல்லும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த தொடருந்து நிலையத்தில் முற்பதிவு பயண சீட்டு பெற்றுக்கொள்ளல் இதுவரை இல்லாத சூழலில் மாங்குளம் மற்றும் முல்லைத்தீவு, மல்லாவி மக்கள் கிளிநொச்சி அல்லது வவுனியா சென்றே குறித்த சேவையினை பெற்றுக்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாக தெரிவித்த மக்கள் அந்த ஒழுங்கு நடவடிக்கையினையும் மாங்குளத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
