ஒப்பந்தங்கள் அனைத்தும் மக்களை ஏமாற்றியது : சிங்களவர்களிடம் இரந்து கேட்பது உரிமை அல்ல
இலங்கையில் (Sri Lanka) தமிழ் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் மக்களை ஏமாற்றிய நிலையில் நாம் சிங்கள மக்ககளிடம் உரிமையை இரந்து கேட்கக் கூடாது என இலங்கையின் கட்டமைப்பான இன அழிப்பும் தமிழ் மக்களின் இனச் சுத்திகரிப்பும் என்ற நூலின் ஆசிரியர் ச. செல்வேந்திரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் ( C. V. Vigneswaran) இல்லத்தில் நேற்று (21) இடம்பெற்ற இலங்கையின் கட்டமைப்பான இனவழிப்பும் தமிழ் மக்களின் இன சுத்திகரிப்பும் என்ற நூலின் அறிமுக உரையை ஆற்றிய போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தலைமை
மேலும் தெரிவிக்கையில், “1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு இலங்கையில் ஏற்பட்ட சம்பவம் என்னை மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென சிந்திக்க வைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்காக பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டிருந்தேன்.

தற்போது இந்த நூலை இரண்டு வருட முயற்சியின் பயனாக தற்போது வெளியிட்டு வைப்பதில் பெருமை அடைகிறேன். இந்த நூலை எழுத வேண்டும் என நான் சிந்தித்தபோது தமிழ் மக்களின் அவலங்களை கூறுவது மட்டுமல்லாது ஒரு அரசியல் தலைமையின் வழிநடத்தலில் சர்வதேசம் வரை செல்ல வேண்டும் என விரும்பினேன்.
இதற்காக நீதியரசரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரனை தொடர்பு கொண்டேன் அவர் நீங்கள் நூலை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் அதனை நான் வெளியிட்டு வைக்கிறேன் என்றார்.
இந்த நூல் கட்சி சார்ந்தது அல்ல தமிழ் மக்களுக்காக முன் நின்று செயல்படுபவர்கள், தமிழ் மக்கள் வாழுகின்ற சகல நாடுகளுக்கும் சர்வதேச இராஜதந்திர மட்டத்திற்கும் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை வரை கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.
சர்வதேச அரங்கு
இறுதி யுத்தம் நிறைவடைந்து 14 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயம் உரிய முறையில் ஐக்கிய நாடுகள் சபையில் எதிரொலிக்கவில்லை.

இஸ்ரேலுக்காக (Israel) தூதர்கள் போராடினார்கள் அவர்களின் ஒன்றிணைந்த பலம் சர்வதேச நீதியில் பேச வைத்த நிலையில் தமிழ் மக்களின் பலமும் சர்வதேச அரங்கில் எதிரொலிக்க வேண்டும்.
பல இன மக்கள் வாழும் இலங்கை தீவில் தமிழ் மக்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் அல்லாமல் தமிழினம் சிங்களவர்களிடம் இரந்து கேட்கக் கூடாது. ஒரு இனத்தை பின் நிறுத்தி மற்றைய இனம் அதிகாரத்தை செலுத்துவது ஜனநாயகம் அல்ல” என்றும் நூலின் ஆசிரியர் ச. செல்வேந்திரா குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல் - கஜி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam