பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவுகளை வெளியிடுமாறு அறிவிப்பு
கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவு விபரங்களை வெளியிட எதிர்வரும் 6ம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 6ம் திகதி நள்ளிரவு 12 மணிக்குள் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைக்குழு வேட்பாளர்கள் செலவு விபரங்களை வெளியிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் போட்டியிட்ட மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் இந்த விபரங்கள் ஒப்படைக்கப்பட வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
விசேட பிரிவுகள்
தேசிய பட்டியல் வேட்பாளர்கள் தங்களது செலவு விபரங்களை தோதல் செலயகத்திடம் ஒப்படைக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.
2023ம் ஆண்டு 3ம் இலக்க தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் செலவு விபரங்களை வெளியிட வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து வேட்பாளர்களும் தங்களது செலவு விபரங்களை வெளியிடக்கூடிய வகையில் அனைத்து மாவட்டங்களிலும் விசேட பிரிவுகள் இயங்கி வருவதாகவும் இவை வேலை நாட்களில் மாலை 6 மணி வரையிலும், 6ம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரையிலும் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 6ம் திகதிக்குள் செலவு விபரங்கள் வழங்காவிட்டால் அது ஓர் சட்ட விரோத செயற்பாடாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.