அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்! அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்..!
தமிழக சட்டமன்றத்தேர்தல் முடிவுகளை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் வரும் மே 4 ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியை கண்காணிக்க 234 தொகுதிக்கும் பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திறைசேரி செயலாளர் பதவி நீக்கப்படுகிறாரா: ஜனாதிபதி அநுரவிற்கும் சிக்கல் - அவரின் பதவியும் பறிபோகுமா..!
அதிகாரிகளுக்கு தீவிர பயிற்சி
இதனைத்தொடர்ந்து மே 4 ஆம் திகதி காலை 8 மணிக்கு வாக்குகளை எண்ணும் பணி தொடங்கப்படும் என்றும், இந்த பணியில் தமிழகம் முழுவதும் சுமார் ஒரு இலட்சம் ஊழியர்கள் பங்கேற்பதாகவும், அவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக தீவிர பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.

4 ஆம் திகதி காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இதைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
இதற்காக 62 வாக்கு எண்ணும் மையங்களில் 14 மேசைகள் போடப்பட்டுள்ளதுடன், பெரிய தொகுதிகளுக்கு 20 முதல் 28 மேசைகள் போடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியதும், முதல் சுற்று முடிவு காலை 9 மணி முதல் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வாக்குகள் எண்ணப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியை கண்காணிக்க வெளிமாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
234 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
ஒரு தொகுதிக்கு ஒரு அதிகாரியென வெளிமாநிலங்களை சேர்ந்த 234 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, மே 4 ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கிய பிறகு, ஒவ்வொரு சுற்று முடிவுகளும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட வெளிமாநிலத்தை சேர்ந்த தேர்தல் ஐஏஎஸ் அதிகாரிகள் கையெழுத்திட்ட பிறகே அதிகாரப்பூர்வமாக வெளியிட முடியும்.
மேலும், வாக்குப்பதிவின்போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க, தேர்தல் அலுவலர் மற்றும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரி அவ்வப்போது உத்தரவு பிறப்பிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, இறுதி முடிவு அறிவிக்கும்போதும் அந்தந்த தொகுதி தேர்தல் ஐஏஎஸ் அதிகாரி கையெழுத்து பெற்ற பிறகே அதிகாரப்பூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒவ்வொரு தொகுதிக்கும் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், நுண்பார்வையாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.
நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம்! பல மாதங்களாக மறைக்கப்பட்ட டொலர் மோசடி - விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri