வடக்கில் தனியார் பேருந்துகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்(Video)
யாழ்ப்பாண புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேருந்து உரிமையாளர்கள் வியாழக்கிழமை ஆராய்ந்துள்ளனர்.
இரண்டு மாத காலப்பகுதிக்குள் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளும் சேவையாற்ற வேண்டும்.
தீர்மானம்
அவ்வாறு சேவையாற்ற தவறினால் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் தனியார் பேருந்துகள் அனைத்தும் பணி புறக்கணிப்பில் ஈடுபடுமென யாழ்.மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பேருந்து கம்பனிகளின் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதரன் தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்துகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேருந்து உரிமையாளர்கள் கலந்துரையாடிய போதே மேற்படி தீர்மானம் எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
பைசன் படத்தில் நடிப்பதற்காக துருவ் விக்ரம் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
இன்னும் 4 நாட்களில் எதிர்பாராத அளவு செல்வத்தை கொடுக்கும் சுக்கிரன் பெயர்ச்சி- உங்களுக்கும் லக் இருக்கா? Manithan