ஊரடங்கு நேரத்திலும் மருந்தகங்கள் திறந்திருக்கும்!
ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், அனைத்து மருந்தகங்கள் மற்றும் செவிலியர் இல்லங்கள்(நேர்ஷிங் ஹோம்ஸ்) இரவு 7.00 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அவசரத் தேவைகள் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் மீது அரசாங்க ஏற்பாட்டுக்குழுக்களால் தாக்குதல்கள் நடத்தப்பட்டதன் பின்னர், நாடளாவிய ரீதியாக ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு நாளை காலை 6மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
