13ஐ எதிர்க்கும் மொட்டு கட்சிக்கு மத்தியில் ரணிலின் சர்வகட்சி மாநாடு
13 ஆம் திருத்தச்சட்டத்திற்கு எதிராக கொடி தூக்கும் மொட்டு கட்சியின் 134 உறுப்பினர்களுக்கு மத்தியில் இன்றையதினம் சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்று வருகிறது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் முக்கிய கூட்டமான இந்த மாநாடானது இந்திய பிரதமர் மோடியின் வார்த்தைகளுக்கு ரணில் நகர்தவுள்ள காய்களை வெளிச்சமிடும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் தாம் பங்கேற்க போவதில்லை என அறைகூவல் விட்ட சில கட்சிகள், ஜனாதிபதியின் அழைப்புக்கு ஒப்புதல்களை வழங்கியிருந்தது.
எனினும் தென்னிலங்கை அரசியலில் நிலவும் உர்ப்பூசல்களுக்கு மத்தியில் நடைபெறும் இந்த சர்வகட்சி மாநாடு, தமிழர் தரப்புக்கு ஒரு முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது.
மேலும், 13 தமிழருக்கு கிடைக்குமா, இன நல்லிணக்கம் ஏற்படுமா, மாகாணசபை முறைமை நடைமுறைப்படுத்தப்படுமா என பலதரப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் இந்த மாநாட்டின் மூலமே கிடைக்கப்பெறவுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
