நாட்டில் நிலவும் மோசமான வானிலை.. அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு!
இலங்கை கிரிக்கெட் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது நிலவும் மழைப் பொழிவைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட போட்டி அட்டவணைகள்
அதன்படி, கிரிக்கெட் கிளப்களுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 'பி' பிரிவு இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டி மற்றும் மாகாண ரீதியான போட்டி ஆகியவையும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மழைப் பொழிவு தணிந்த பிறகு திருத்தப்பட்ட போட்டி அட்டவணைகள் அறிவிக்கப்படும் என்று கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு, இன்று நடைபெறவிருந்த தடகளத் தேர்வுப் போட்டியும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தடகள சங்கம் அறிவித்துள்ளது.