பரபரப்பிற்கு மத்தியில் ஈரானின் புதிய தலைமை நியமனம்!
ஈரானின் தலைமைத்துவக் குழுவில் அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளார்.
கார்டியன் கவுன்சிலின் மதத் தலைவரான அலிரேசா அராஃபி, ஈரானின் தலைமைத்துவக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிபுணர்கள் சபை புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை உயர்மட்டத் தலைவரின் பங்கை நிறைவேற்றும் பணி இந்த அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.
தலைமைத்துவக் குழு
ஜனாதிபதி பெஷேஷ்கியன் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மொஹ்சேனி-எஜீயுடன் அராஃபி தற்காலிக தலைமைத்துவக் குழுவில் இருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஈரான் முன்னாள் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) மறைவைத் தொடர்ந்து, நாட்டின் அதிகார வெற்றிடத்தை நிரப்புவதற்காக இடைக்காலத் தலைமைத்துவ குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் தேசிய பாதுகாப்பு சபையின் செயலாளர் அலி லரிஜானி (Ali Larijani) இந்த விடயத்தினை அறிவித்திருந்தார். ஈரானிய அரசியலமைப்புச் சட்டத்தின் 111ஆவது பிரிவின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, புதிய அதி உயர் தலைவர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் வரை, நாட்டின் முக்கியப் பொறுப்புகளை இந்தத் தற்காலிக சபை கவனித்துக் கொள்ளும். ஈரானிய ஊடகங்களின் தகவல்படி, இந்தத் தற்காலிக குழுவில் மூன்று முக்கிய நபர்கள் இடம்பெறவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam