ஏலியன்கள் பூமிக்கு வந்ததற்கு எந்தவித ஆதாரமும் இல்லை: அமெரிக்கா பாதுகாப்புத்துறை
ஏலியன்ஸ் என்ற வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வருகை தந்ததாகவோ அல்லது இங்கு விபத்துக்குள்ளானதாகவோ எந்த ஆதாரமும் இல்லை என்று அமெரிக்காவின் மூத்த இராணுவத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
முரண்பாடான அடையாளம் காணப்படாத பொருள்கள் விண்வெளியில் இருந்தாலும், வானத்தில் இருந்தாலும் அல்லது நீருக்கடியில் இருந்தாலும் அவ்வப்பொழுது பெண்டகனால் ஆராயப்பட்டு வருகின்றது.
ஏலியன் வருகை
இந்த நிலையில் ஏலியன் வருகை வேற்றுகிரகவாசிகளின் விபத்து அல்லது அது போன்ற எந்தவொரு சம்பவத்தையும் தாம் இன்றுவரை அறியவில்லை என்று உளவுத்துறை மற்றும் பாதுகாப்புக்கான செயலாளர் ரொனால்ட் மௌல்ட்ரி கூறியுள்ளார்.
எனினும், பென்டகனில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆல்-டொமைன் அனோமலி ரெசல்யூஷன் ஆபிஸின் (AARO) இயக்குனர் சான் கிர்க்பாட்ரிக், இது குறித்து கூறும்போது ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது, வேற்று கிரக வாழ்க்கையின் சாத்தியத்தை நாங்கள் நிராகரிக்கவில்லை, ஆராய்ச்சிக்கு அறிவியல் சார்ந்த ஆதாரத்தை சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு
AARO அலுவலகம், இராணுவ நிறுவல்கள், தடைசெய்யப்பட்ட வான்வெளிகளில் விபரிக்கப்படாத நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு சாத்தியமான அச்சுறுத்தல்களை அடையாளம் காண உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமெரிக்க இராணுவம் அதிகாரப்பூர்வமாக அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வுகள் என்று 2004 முதல் கவனிக்கப்பட்ட 140 க்கும் மேற்பட்ட பதிவுகளை கடந்த ஆண்டு ஆவணப்படுத்தியது.
எனினும் ஒரு மூத்த கடற்படை அதிகாரி பதிவான மொத்த நிகழ்வுகளின் எண்ணிக்கை ஏற்கனவே 400 ஐ எட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
இதேவேளை வேற்றுகிரகவாசிகளின் உடல்கள் அல்லது வேற்று கிரக பொருட்கள்
மீட்கப்பட்டதாக எந்த பதிவுகளும் குறிப்பிடவில்லை என்று ரொய்ட்டர்ஸ்
தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
