இலங்கைக்கு அறிவுரை வழங்கப்போகும் அலிபாபா
உலகின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மின் வணிக நிறுவனங்களில் ஒன்றான அலிபாபா, இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கவுள்ளது.
இந்த நிறுவனங்கள், தங்கள் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவது மற்றும் புதிய வெளிநாட்டு சந்தைகளில் நுழைவது குறித்த ஆலோசனையையே அலிபாபா வழங்கவுள்ளது.
இதன் முதல் கட்டமாக, Alibaba.comஇன் உயர் மட்ட நிர்வாகி ஒருவர் பங்கேற்கும் ஒரு சிறப்பு அமர்வு, 2025 மே 29ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக, இலங்கை வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவுக் கருவிகள்
இந்த அமர்வை Alibaba.comஇன் வணிக மேம்பாட்டு மேலாளர் மா ஹாபோ நடத்தவுள்ளார்.
இதன்போது, அவர் ஏற்றுமதி செயன்முறைகளை எளிதாக்கும் மற்றும் விற்பனையாளர்களை சர்வதேச வாங்குபவர்களுடன் நேரடியாக இணைக்கும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்துவது உட்பட, அலிபாபாவின் உலகளாவிய உத்திகளையும் அறிமுகப்படுத்தவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




