ராஜபக்சக்களின் திட்டங்களுக்கு அலி சப்ரி போட்ட தடை!
உலகிற்கு பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் மத்திய கிழக்கு யுத்தச் சூழலுக்கு மத்தியில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முன்னெடுத்து வரும் சந்தர்ப்பவாத அரசியலைப் புறந்தள்ள முன்னாள் அமைச்சரும் சட்டத்தரணியுமான அலி சப்ரி யதார்த்தமான சில அறிவுரைகளை அரசுக்கு முன்வைத்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அவர் இலங்கைக்கு முன்னாலுள்ள சவால்களை முறியடிக்கப் பல பிரபலமற்ற தீர்மானங்களை உடனடியாக எடுக்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்க முடியாதவை! சட்டத்தரணி ஜானக அதிகாரி தெரிவிப்பு
முன்வைத்துள்ள தீர்மானங்கள்
வாகன இறக்குமதியை முழுமையாக நிறுத்துதல். ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்துதல்.
அதன் மூலம் எரிசக்தி பாவனையை குறைப்பதோடு வெளிநாட்டுச் செலாவணியைப் பாதுகாத்தல் என்பன அவசரத் தேவைகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் எவ்வளவு கடினமான சூழ்நிலைகள் நிலவினாலும் அவற்றை சகித்துக் கொண்டு வாரத்தின் 5 நாட்களும் அரச சேவையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

என்றும் ஒட்டுமொத்தமாக அரச மற்றும் தனியார் துறைகளின் பொருளாதாரச் செயல்பாடுகளை உயர்ந்தபட்ச செயற்பாட்டில் பேண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் சட்டத்தரணியாகப் பணியாற்றியதுடன் அந்த அரசாங்கத்தில் நீதி வெளிவிவகாரம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் செயற்பட்ட அலி சப்ரி முன்வைத்துள்ள இந்த யதார்த்தமான கருத்துக்கள் குறித்து பல விமர்சகர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 14 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam