கொழும்பில் தூதரக அதிகாரிகளை சந்தித்த அலி சப்ரி(Photos)
கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை அமைச்சர் அலி சப்ரி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன் போது வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை அரசாங்கத்தின் பணிகள் குறித்து, அமைச்சர்
அலி சப்ரி, இராஜதந்திர சமூகத்தினருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு அடுத்தமாதம் இடம்பெறவுள்ள நிலையில், கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை அமைச்சர் சந்தித்து விளக்கமளித்துள்ளார்.
மேலும் காணாமல்போனோர் விடயம், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில், தான் தெளிவுபடுத்தியதாக, அமைச்சர் அலி சப்ரி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினை
உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்து இராஜதந்திரிகளுக்கு எடுத்துரைத்ததாகவும் அவர் குறித்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் காணாமற்போனோர் குறித்த அலுவலகம் ஊடாக, காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.







அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
