இந்தியாவில் ரணில் பேச்சுவார்த்தை: சீனா- இந்தியா தொடர்பில் விவாதிக்கப்படவில்லை - அலி சப்ரி
புதுடெல்லியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பேச்சுவார்த்தையின் போது சீனா மீதான இந்தியாவின் கவலைகள் குறித்த விவாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தியப் பெருங்கடல் அமைதியான பிராந்தியமாக இருக்க வேண்டும் என்பதை இந்தியாவும் இலங்கையும் ஏற்றுக்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்ப்பு தெரிவிக்கும்
மேலும், இந்தியாவும் இலங்கையும் பரஸ்பரம் நியாயமான பாதுகாப்புக் கவலைகளை உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், சீனா தொடர்பாக விவாதிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், திருகோணமலையில் இந்தியத் திட்டங்கள் குறித்து சீனா கவலைகளை எழுப்பும் சாத்தியக்கூறுகள் குறித்து அலி சப்ரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சப்ரி, இலங்கை, வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளும் எந்தவொரு திட்டத்திற்கும் எந்தவொரு நாடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |