அயதுல்லா அலி கமேனி பலியானார் - கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள சடலம்! மத்திய கிழக்கில் பதற்றம்
ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி இறந்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 1989 முதல் ஈரானை ஆட்சி செய்து வரும் கமேனி இறந்துவிட்டார், அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்
இஸ்ரேலிய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, அமெரிக்காவிற்கான இஸ்ரேலிய தூதர் கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகளுக்குத் தெரிவித்தாக கூறப்பட்டுள்ளது.

கமேனி "இனி எங்களுடன் இல்லை" என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சிறிது நேரத்திற்கு முன்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை எனினும், அவர் கொல்லப்பட்டார் என்பதில் இஸ்ரேலியர்கள் நம்பிக்கையுடன் இருப்பதாகத் செய்திகள் வெளியாகியுள்ளன.
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam