அலி கமெனி உயிருடன் இருக்கிறாரா...வலுக்கும் சந்தேகம்! முற்றாக தரைமட்டமான அவரது அதிகாரப்பூர்வ இல்லம்
இஸ்ரேல் ஊடகங்களில் வெளியான தகவல்களின் பின்னர், ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமெனி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற வதந்திகள் பரவியுள்ளன.
எனினும், அவர் உயிருடன் இருப்பதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அலி கமெனி
இஸ்ரேலின் Channel 12, பெயர் குறிப்பிடப்படாத இஸ்ரேல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி, 86 வயதான அலி கமெனி கொல்லப்பட்டிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, பிற இஸ்ரேல் ஊடகங்களும் அதே தகவலை வெளியிட்டன. ஆனால், அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் எச்சரித்தன.
இந்த தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Aragchi, ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில், “எனக்குத் தெரிந்த வரையில் காமனேய் உயிருடன் உள்ளார்” என்று கூறினார்.
அதிகாரப்பூர்வ இல்லம்
இன்று(28), இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானில் தாக்குதல் தொடங்கின. தொடக்கத் தாக்குதல்களில் சில, அலி கமெனியின் அலுவலகம் அமைந்த பகுதிகளை குறிவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் ஏற்கனவே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. “ஈரான் உச்சத் தலைவர் காமேனி மற்றும் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தாக்குதலின் இலக்குகளாக இருந்தனர்,” என்று இஸ்ரேல் ஊடகங்கள் வட்டாரங்களை மேற்கோள் காட்டி தெரிவித்தன.

The New York Times வெளியிட்ட செயற்கைக்கோள் புகைப்படத்தில், தெஹ்ரானில் உள்ள கமெனியின் வீட்டு வளாகத்தில் சேதம் ஏற்பட்டிருப்பது காணப்படுகிறது. அந்த வளாகம் அவரது அதிகாரப்பூர்வ இல்லமாகவும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Reuters செய்தியின்படி, ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அமீர் நசிர்சாதே மற்றும் புரட்சிகர காவல் படைத் தளபதி முகம்மது பக்பூர் தாக்குதல்களில் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளன.
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam