இலங்கையர்கள் உடனான விநியோகத்தை திடீரென நிறுத்திய Ali express
உலகின் முன்னணி ஒன்லைன் சந்தைகளில் ஒன்றான அலி எக்ஸ்பிரஸ், இலங்கைக்கு பல வகையான பொருட்களை விநியோகிக்கும் சேவையை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று இந்த தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளது.
வரி விதிப்பு
அதன்படி, குறித்த இணையத்தள சந்தையிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் நுகர்வோர் தங்கள் பொருட்களை கொண்டு செல்ல மூன்றாம் தரப்பு சரக்கு பகிர்தல் சேவையைத் தேர்வு செய்யுமாறு அலி எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில், அந்நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு தகவல் கோரிய போது, இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் தொடர்பில் தெளிவு இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவன வாடிக்கையாளர் சேவைத் துறை தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |