ஈரானை நோக்கி 850க்கும் மேற்பட்ட அதிதீவிர சக்திவாய்ந்த ஏவுகணைகள்! திணறும் ட்ரம்ப் நிர்வாகம்
ஈரானுக்கு எதிரான போரில் கடந்த நான்கு வாரங்களில் மட்டும் அமெரிக்கா 850க்கும் மேற்பட்ட டோமாஹாக் (Tomahawk) ஏவுகணைகளை ஏவியுள்ளது.
இதன் காரணமாக, அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தற்போது கடும் நெருக்கடியைச் சந்தித்து வருவதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு டோமாஹாக் ஏவுகணையைத் தயாரிப்பதற்கு சுமார் 3.6 மில்லியன் டொலர்கள் செலவாவதுடன், அதனை முழுமையாக உருவாக்கி முடிக்க 2 ஆண்டுகள் வரை காலம் எடுக்கும் என்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
டோமாஹாக் (Tomahawk)
குறிப்பாக, கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வெறும் 57 ஏவுகணைகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரே மாதத்தில் முன்னூற்றுக்கும் அதிகமான ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது இராணுவ அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏவுகணைகளின் கையிருப்பு "அபாயகரமான அளவு" குறைந்துள்ளதாகவும், உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் கையிருப்பு தீர்ந்துவிடும் என்றும் ஒரு அதிகாரி எச்சரித்துள்ளார்.
இதன் காரணமாக, உலகின் பிற பகுதிகளில் உள்ள ஏவுகணைகளை இங்கு கொண்டு வருவது அல்லது புதிய ஏவுகணைகளை விரைவாகத் தயாரிப்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், பென்டகன் செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல் இந்த கவலைகளை மறுத்துள்ளார்.
உலகின் வலிமையான இராணுவத்தை பலவீனமாகக் காட்ட ஊடகங்கள் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், ஜனாதிபதியின் விருப்பப்படி எந்தவொரு பணியையும் எந்த நேரத்திலும் நிறைவேற்றத் தேவையான அனைத்தும் அமெரிக்க இராணுவத்திடம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், வெள்ளை மாளிகைப் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லெவிட் கூறுகையில், ஜனாதிபதி ட்ரம்ப் வகுத்துள்ள "ஓபரேஷன் எபிக் ஃபியூரி" (Operation Epic Fury) திட்டத்தின் இலக்குகளை அடையத் தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் அமெரிக்காவிடம் தாராளமாக உள்ளதாகத் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு பாரிய இழப்பு
மார்ச் 5ஆம் திகதி அன்று செய்தியாளர்களிடம் பேசிய பென்டகன் தலைவர், தங்களுக்கு ஆயுதத் தட்டுப்பாடு ஏதுமில்லை என்றும், தேவைப்படும் வரை இந்தப் போரைத் தொடர முடியும் என்றும் கூறினார்.

ஆனால், அவரே தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு நிறுவனங்களை அணுகி, முக்கியமான ஆயுதங்களை விரைவாக வழங்குமாறு வலியுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இராணுவ ஆய்வு நிபுணரான மார்க் கான்சியன் இது குறித்து கூறுகையில், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான ஏவுகணைகளைச் செலவழிப்பது பசிபிக் பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய மோதல் சூழலில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.
போர் தொடங்கும் போது அமெரிக்கக் கடற்படையிடம் சுமார் 3,100 ஏவுகணைகள் இருந்திருக்கலாம் என்று கணித்துள்ள அவர், தற்போது ஏற்பட்டுள்ள இழப்பை மீண்டும் நிரப்ப பல ஆண்டுகள் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
1991 வளைகுடாப் போரிலிருந்து அமெரிக்க இராணுவத்தின் முக்கிய ஆயுதமாக விளங்கும் இந்த டோமாஹாக் ஏவுகணைகள், 1000 மைல் தொலைவில் இருந்தே இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை.
இவை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படுவதால், ஆபத்தான வான்வெளிகளுக்குள் விமானிகளை அனுப்ப வேண்டிய அவசியத்தைக் குறைக்கிறது.
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri