சர்வதேசத்தின் பார்வையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் தமது உறவுகளை நினைவுக்கூர்ந்த நிகழ்வு தொடர்பில் சர்வதேச ஊடகமொன்று சிறப்பு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
முழுமையாக, குறித்த நிகழ்வில் மக்களின் உணர்வுகள், அவர்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் சிந்தனைகளை கோடிட்டு இந்த கட்டுரை வரையப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் தாக்குதல்கள்
முள்ளிவாய்க்கால் தாக்குதல்களின் போது தமது உறவுகளை இழந்த பின்னர், தமது வாழ்க்கையை புதிதாக ஆரம்பித்த பலர், இலங்கை அரசாங்கத்தினால், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு தரப்படும் என்பதை நம்பவில்லை என்று சர்வதேச ஊடகமொன்று கூறுகிறது.
முன்னைய அரசாங்கங்கங்கள் தமது உறவுகளை நினைவுக்கூரும் போது தடைகளை ஏற்படுத்தியபோதும், அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியில் இந்த தடைகள் இருக்கவில்லை.
அதேநேரம், அநுரகுமார திசாநாயக்க தேர்தலுக்கு முன்னர் வழங்கிய உறுதிமொழிகள், நிறைவேற்றப்பட்டு, தமது காணாமல் போன உறவுகள் கண்டுபிடிக்கப்படுவார்களா? காணிகள் திரும்ப வழங்கப்படுமா? அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்களா? என்ற கேள்விகளுக்கு தமிழ் மக்கள் இன்னும் பதில்களை தேடிக்கொண்டிருக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட தமிழர்கள்
எனினும் முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மத்தியில், அநுர குமார திசாநாயக்கவின் உறுதிமொழிகள் தொடர்பில் கலவையான கருத்துக்கள் வெளியாகிக்கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்த அரசாங்கம் தமது அபிலாசைகளை நிறைவேற்றும் என்று தாம் நம்பவில்லை. அவ்வாறு நிறைவேற்றிய பின்னர், அதனை நம்பலாம் என்றும் சிலர் கருத்துரைத்துள்ளனர்.
