தேசிய பாடசாலைகளை பின்தள்ளி வவுனியா மாவட்டத்தில் அல் இக்பால் பாடசாலை முதலிடம்
க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் மாவட்ட ரீதியில் தேசிய பாடசாலைகளை பின்தள்ளி நூறு வீத சித்தியுடன் வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயம் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் சித்தி வீதம் தொடர்பான புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன.
அதில், வவுனியா மாவட்டத்தில் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும், அனைத்து பாடங்களிலும் சித்தி பெற்று 100 வீத சித்தியுடன் வவுனியாவில் ஒரே ஒரு பாடசாலையாக வவுனியா தெற்கு வலயத்தைச் சேர்ந்த, சூடுவெந்தபுலவு அல் இக்பால் மகாவித்தியாலயம் சாதனை படைத்துள்ளது.
புள்ளி விபரங்கள்
வவுனியா தெற்கு வலயத்தில் இரண்டாம் இடத்தை 92.9 வீத சித்தியைப் பெற்று பாவற்குளம் கணேஸ்வரா மகாவித்தியாலயம் பெற்றுள்ளதுடன், மூன்றாம் இடத்தை 91.9 வீத சித்தியைப் பெற்று பெரிய கோமரசங்குளம் மகாவித்தியாலயம் பெற்றுள்ளது.
ஏனைய பாடசாலைகள் 90 வீதத்திற்கும் குறைவான சித்தியையே பெற்றுள்ளன. அதிலும் தேசிய பாடசாலைகளான இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி 77 வீத சித்தியுடன் வவுனியா தெற்கு வலயத்தில் 11ஆவது நிலையையும், வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயம் 69.4 வீத சித்தியை பெற்று தெற்கு வலயத்தில் 17 ஆவது நிலையையும், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் 56.1 வீத சித்தியைப் பெற்று தெற்கு வலயத்தில் 22 ஆவது நிலையையும் பெற்றுள்ளன.
மேலும், வவுனியா தெற்கு வலயத்தில் இருந்து 28 பாடசாலைகளின் ஊடாக மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் 4 பாடசாலைகளே 50 வீதத்திற்கும் குறைவான சித்திகளைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![இரண்டாம் முள்ளிவாய்க்காலுக்கு யார் பொறுப்பு கூறுவர்!](https://cdn.ibcstack.com/article/97fed5da-d239-483d-a274-ef6daf77dd5c/24-666ebd384785a-md.webp)
இரண்டாம் முள்ளிவாய்க்காலுக்கு யார் பொறுப்பு கூறுவர்! 3 மணி நேரம் முன்
![Optical Illusion: ஆந்தைகளுக்கு நடுவில் மறைந்திருக்கும் குருவியை ஐந்து நொடிக்குள் கண்டுபிடிக்க முடியுமா?](https://cdn.ibcstack.com/article/b099038e-1ff7-41bb-9649-06b2f1e6b26b/24-666e2be49440f-sm.webp)
Optical Illusion: ஆந்தைகளுக்கு நடுவில் மறைந்திருக்கும் குருவியை ஐந்து நொடிக்குள் கண்டுபிடிக்க முடியுமா? Manithan
![சீரியலில் இருந்து வெளியேறிய பிரபலம் புதிய என்ட்ரி கொடுத்த நடிகர்... விஜய் டிவியின் எந்த தொடரில் பாருங்க](https://cdn.ibcstack.com/article/e7995578-0185-4c3d-bf16-3c8a9d16a3e2/24-666dc338031f3-sm.webp)
சீரியலில் இருந்து வெளியேறிய பிரபலம் புதிய என்ட்ரி கொடுத்த நடிகர்... விஜய் டிவியின் எந்த தொடரில் பாருங்க Cineulagam
![குக் வித் கோமாளி 5 சீசனில் கோமாளியாக இணைந்துள்ள பிரபலம்... விஜய் டிவி பிரபலம் தான், யாரு பாருங்க](https://cdn.ibcstack.com/article/67ebba3f-9733-491f-a772-d1fa67d56e45/24-666d54d31c4b7-sm.webp)
குக் வித் கோமாளி 5 சீசனில் கோமாளியாக இணைந்துள்ள பிரபலம்... விஜய் டிவி பிரபலம் தான், யாரு பாருங்க Cineulagam
![குவைத் தீ விபத்து: உயிரிழந்தோருக்கு ரூ.8 லட்சம், 4 ஆண்டு சம்பளம் நிவாரணம்-NBTC நிறுவனம்](https://cdn.ibcstack.com/article/0ee67f38-93e5-4cd4-a351-7b56b8bf61b6/24-666dc637ed736-sm.webp)
குவைத் தீ விபத்து: உயிரிழந்தோருக்கு ரூ.8 லட்சம், 4 ஆண்டு சம்பளம் நிவாரணம்-NBTC நிறுவனம் News Lankasri
![என்னது சீரியல் நடிகை மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் இந்த பழம்பெரும் நடிகரின் பேரனா?- இதுவரை வெளிவராத தகவல்](https://cdn.ibcstack.com/article/8cde19d4-396d-4d42-9639-559db7df7b87/24-666daaf064811-sm.webp)