மாணவர்களுக்கு பாரிய அநீதி இழைப்பு! : சஜித் குற்றச்சாட்டு
பாடத்திட்டத்தை உரிய வகையில் பூர்த்தி செய்யாது உயர்தரப் பரீட்சையை நடத்த முற்படுவது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa ) குற்றம் சுமத்தியுள்ளார்.
ஹட்டனில் நேற்று (16) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர்,
பாடத்திட்டத்தைப் பூர்த்தி செய்யாது எவ்வாறு பரீட்சையை நடத்த முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவிட் வைரஸ் காரணமாக இணைய வழி கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், அதனைப் பெற்றுக்கொள்வதில் மாணவர்களுக்கு பாரிய அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தன. சிலருக்கு தொழில்நுட்ப வசதிகள் கிடைத்திருக்கவில்லை.
ஆனால், முழுமையான பாடத்திட்டத்தையும் உள்ளடக்கியவாறு பரீட்சைகளுக்கான வினாப்பத்திரங்களை தயாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது மாணவர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும் எனவும் எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
