அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தம்
னிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டில், அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் கதிர் செல்வனின் கட்சி உறுப்புரிமையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
பிரதேசத்தின் மரண வீடு ஒன்றுக்கு வந்திருந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று என அறியப்பட்ட நிலையில் அந்த மரண வீட்டுக்கு சென்றமை காரணமாக கதிர்செல்வன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு பி.சி .ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் அவர் அதனை மீறி அரசியல் நிகழ்வுகளில் கலந்துக்கொண்ட போது வெளியான பரிசோதனை முடிவின் படி அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இவர் பங்கேற்ற அரசியல் நிகழ்வில் பிரசன்னமாகியிருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் உட்பட பலர் தற்போது சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்தே கதிர் செல்வன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam