அக்கரப்பத்தனை பிரதேச சபை இ.தொ.கா வசம்
நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் வெற்றிப் பெற்ற உறுப்பினர்களின் சத்தியாப்பிரமாண வைபமும் பதவிகளுக்கான தலைவர்கள் தெரிவும் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 17.06.2025 அன்று மதியம் 02 மணியளவில் லிந்துலை நாகசேனை நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் சத்தியமூர்த்தி ரதிதேவி, திறந்த வாக்கெடுப்பு மூலம் பிரதேச சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதே நேரத்தில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அல்லிமுத்து பிரதீப் தினேஷன் சபையின் உப தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது.
இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக ரதிதேவி, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக தேவராஜ் சந்திரகுமார் ஆகியோர் தலைவருக்காக போட்டியிட்டனர்.
இதில் திறந்த வாக்கெடுப்பிற்கு 8 வாக்குகள் கிடைக்கப்பெற்றதால், திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதில் எட்டு வாக்குகளை பெற்று சபையின் தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிராஸ் சார்பாக போட்டியிட்ட சத்தியமூர்த்தி ரதிதேவி தெரிவு செய்யப்பட்டார்.





நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் திருவிழா





நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

இந்தியா-ரஷ்யா புதிய ஒப்பந்தம்: ரயில்வே, அலுமினியம், சுரங்க தொழில்நுட்பங்களில் கூட்டு முயற்சி News Lankasri

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
