மீன் பிடிக்க சென்ற இரு பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கி பலி
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஆலையடிவேம்பு - பனங்காட்டு பாலத்திற்கு அண்மையில் உள்ள களப்பில் இன்றைய தினம்(08.07.2023) மிதந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் அக்கரைப்பற்று கோளாவில் -02 பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான இராமலிங்கம் சிவகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
களப்பில் உள்ள ஆழமான பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது களப்பின் சேற்றில் புதைந்து இவர் இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
மேசன் தொழில் ஈடுபடும் இவர் மீன்பிடிக்கும் தொழிலை முறையாக கற்றுக்கொள்ளவில்லை எனவும் அவ்வப்போது மீன் பிடிக்க செல்வது வழமை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |