எரிபொருள் விலை தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட எதிர்வுகூறல்

Fuel Price In Sri Lanka Anura Kumara Dissanayaka
By Kamal May 01, 2026 10:10 PM GMT
Report

 உலகச் சந்தையில் நிலவும் அசாதாரண நிலைமைகள் காரணமாக, இலங்கையில் எரிபொருள் விலையைச் சிறிதளவு உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மஹரகமவில் இன்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணியில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிசக்தி துறையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக உயர்ந்து செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட எதிர்வுகூறல் | Akd Hints At Small Fuel Price Hike In Sri Lanka

தற்போது ஒரு லீட்டர் டீசல் 382 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அதன் உண்மையான விலை 482 ரூபாவாகும். அதாவது, ஒரு லீட்டர் டீசலுக்கு அரசாங்கம் 100 ரூபா மானியமாக வழங்குகிறது என தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்காக மட்டும் அரசாங்கம் பாரியளவு நிதியை ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், உலகச் சந்தையில் விலை தொடர்ந்து அதிகரித்தால், உள்நாட்டிலும் சிறிதளவு விலையை உயர்த்த வேண்டியது அவசியமாகும் என தெரிவித்துள்ளார். எரிசக்தி நெருக்கடி மின்சாரத் துறையையும் பாதித்துள்ளது.

ஒருவேளை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், 96% சாதாரண நுகர்வோரை அது பாதிக்காத வகையில் அரசாங்கம் 1,500 கோடி ரூபா மானியத்தை ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

எங்கள் அரசாங்கம் உழைக்கும் மக்களுக்கானது எனவும் உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், பொதுமக்களின் சுமையைக் குறைக்க அதிகபட்ச மானியங்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிலக்கரி மற்றும் எரிபொருள் விலையேற்றம், அத்துடன் நீர்மின் உற்பத்தி நிலையங்களில் நீரின் அளவு குறைந்துள்ளமை போன்ற சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் முறையான திட்டமிடலுடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US