இடமாற்றத்துக்கு எதிராக அஜித் ரோஹண போர்க்கொடி!
இடமாற்ற உத்தரவுகளை வழங்குவதற்குப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகாரம் இல்லை என்று தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதனை அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்கவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
மேலும், அமைச்சின் இடமாற்ற உத்தரவை ஏற்றுக்கொள்வது கட்டாயம் இல்லை எனவும் இன்றைய தினம் (26.04.2023) அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளின் பதவிகள்
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண உள்ளிட்ட 7 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்வதற்கு நேற்றைய தினம் (25.04.2023) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, இதற்கு எதிரான இந்தக்
கடிதத்தைப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி
வைத்துள்ளார்.
அரசமைப்பின் மூலம் பொலிஸ் அதிகாரிகளின் பதவிகளை மாற்றுவதற்குத் தேசிய பொலிஸ்
ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா
அதிபர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 23 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri