எதையும் மறைக்காமல் வெளிப்படுத்த வேண்டும்: அரசிடம் அஜித் வலியுறுத்தல்!
"சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்துகொண்ட ஒப்பந்தத்தில் எதையும் மறைக்காமல் அரசு அப்படியே நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்" என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (26.04.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி கிடைத்ததும் சிலர் பட்டாசு வெடித்து மகிழ்ந்தார்கள். கஷ்டப்படும் மக்களுக்கு அப்படி உதவி கிடைத்தால் மகிழ்ச்சிதான். ஆனால், இதில் முக்கியமான ஒன்றைக் கவனிக்க வேண்டும்.

அரசு செய்துகொண்ட ஒப்பந்தம்
அதுதான் இந்தக் கடனைப் பெறுவதற்காகச் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசு செய்துகொண்ட ஒப்பந்தம்.
அதில் எதையும் மறைக்காமல் அரசு அப்படியே அந்த ஒப்பந்தத்தை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். இதை மக்கள் கட்டாயம் அறிய வேண்டும்.
அரசால் முகாமைத்துவம் செய்ய முடியாத அரச நிறுவனங்கள் கட்டாயம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

பொருளாதார பாதிப்பு
ஆனால், பெற்றோலியம் நட்டத்தில் ஓடவில்லை. அப்படி இருக்கும்போது ஏன் புதிய பெட்டோல் செட்களை திறப்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
போட்டி கூடும்போது விலை குறைந்தால் பரவாயில்லை. இங்கு விலை பற்றி எந்தப்
பேச்சும் இல்லை. இதனால் எமது பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப் போகின்றது"
எனத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan