பதவி விலக தயாராகும் அஜித் நிவர்ட் கப்ரால்? புதிய உறுப்பினர் குறித்து வெளியாகியுள்ள தகவல்
அஜித் நிவர்ட் கப்ரால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நிதி இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்தும் விலகினால், ஏற்படும் வெற்றிடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட மீண்டும் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட நியமிக்கப்பட்ட போதிலும், நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்க அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இந்நிலையில், மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்குமாறு அரசைாங்கம் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவர்ட் கப்ரால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
