ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து அஜித் மான்னப்பெரும விலகல்!
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் அஜித் மான்னப்பெரும, அக்கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்
கம்பஹாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கம்பஹா தொகுதி ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளருமான அஜித் மான்னப்பெரும இந்த அறிவி்த்தலை விடுத்துள்ளார்.
வேட்பு மனுவும் தாக்கல்
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அஜித் மான்னப்பெரும, நான் கடந்த 20 வருடங்களாக கம்பஹா தொகுதியின் அமைப்பாளராக பணியாற்றியுள்ளேன்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட வேட்பு மனுவும் தாக்கல் செய்துள்ளேன்.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து எங்கள் கட்சியில் இணைந்து கொண்ட ஒருவருக்கு எனது தொகுதி அமைப்பாளர் பதவியை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழங்கியுள்ளார்.
பொதுத் தேர்தல் வாக்குச்சீட்டு
இதன் காரணமாக நான் கட்சியில் இருந்து ஒதுங்கிக் கொள்ளத் தலைப்பட்டுள்ளேன். அத்துடன் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்தும் ஒதுங்கிக் கொள்ள தீர்மானித்துள்ளேன்.
எனவே பொதுத் தேர்தல் வாக்குச்சீட்டில் யாரும் எனது பெயருக்கு விருப்பு வாக்குகளை இடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இனி எந்தக் காலத்திலும் இணைந்து செயற்படுவதில்லை என்று முடிவுக்கு வந்துள்ளேன். அதன் காரணமாக அக்கட்சிக்கு வாக்களிப்போர் எனது விருப்பு வாக்கு இலக்கத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றும் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |