அஜித் நிவாட் கப்ரால் பிணையில் செல்ல அனுமதி
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் சரீரப் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய, அஜித் நிவாட் கப்ரால் 10 மில்லியன் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தினியாவில பாலித தேரர் செய்த தனிப்பட்ட முறைப்பாட்டையடுத்து இந்த வழக்கு இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பாலித தேரரின் முறைப்பாடு
தினியாவல பாலித தேரர் செய்த முறைப்பாட்டுக்கமைய விசாரணையை மேற்கொண்டு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கில் திருத்தப்பட்ட முறைப்பாட்டினை தாக்கல் செய்வதற்கும் தினியாவல பாலித தேரருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குற்றம்
2014 ஆம் ஆண்டு அமெரிக்க நிறுவனத்திற்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாகவே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
அமைச்சரவையின் அனுமதியின்றி இவ்வாறு பாரிய தொகை செலுத்தப்பட்டுள்ளமை மிகவும் பாரதூரமான குற்றம் என தினியாவல பாலித தேரர் சுட்டிகாட்டியுள்ளார்.
நிமல் சிறிபால டி சில்வாவை நீக்கமுடியாது! தடையுத்தரைவை பிறப்பித்த நீதிமன்றம்! |