முக்கிய செய்தியொன்றுடன் இலங்கை வரும் இந்திய முக்கியஸ்தர்..!
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்றைய தினம் இலங்கை விஜயம் செய்ய உள்ளார்.
அவர் இன்றும் நாளையம் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ள அஜித் தோவல்
ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை அஜித் தோவல் சந்திக்க உள்ளார்.

நாளைய தினம் அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் முக்கிய செய்தி ஒன்றை தாங்கியே அவர் இவ்வாறு இலங்கை விஜயம் செய்கின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்திப்பு முயற்சி தோல்வி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான ஓர் பின்னணியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கை விஜயம் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam