வெளிநாட்டிலிருந்து வந்திறங்கிய வர்த்தகர் விமான நிலையத்தில் கைது
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய வர்த்தகரே விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (09) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை
சந்தேகநபர் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொண்டு வந்த நான்கு பயணப்பொதிகளிலிருந்து 152 கையடக்கத் தொலைபேசிகள், 05 டெப்கள், 38 விஸ்கி போத்தல்கள் மற்றும் 44 வெளிநாட்டு சிகரட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் ரசாயன தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்? - ஆபத்தான ரிஸின், 350 கிலோ வெடிமருந்து பறிமுதல் News Lankasri