மத்திய ஆபிரிக்கா செல்லும் விமானப்படையினர்
இலங்கை விமானப்படையின் 110 பேர் அடங்கி அணியினர் மத்திய ஆபிரிக்காவில் ஐ.நா அமைதிப்படையின் நடவடிக்கைகளில் கடமையாற்றுவதற்காக இன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இந்த விமானப்படை அணியில் 20 பேர் பெண் அதிகாரிகள். விமானப்படை அணிக்கு வின் கமாண்டர் சம்பத் லியனாராச்சி தலைமை தாங்குகிறார்.
இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தி படையில் தற்போது கடமையாற்றி வரும் படையினருக்கு பதிலாக இவர்கள் கடமையில் இணைவதற்காக மத்திய ஆபிரிக்காவுக்கு செல்கின்றனர்.
இந்த விமானப்படையினரை அழைத்துச் செல்ல ஐ.நாவின் விசேட விமானம் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வந்திருந்தது.
அதேவேளை கடமையை நிறைவு செய்துள்ள விமானப்படையினர் மத்திய ஆபிரிக்காவில் இருந்து நாடு திரும்பவுள்ளனர். எவ்வாறாயினும் மத்திய நாடுகளில் தற்போது ஒமிக்ரோன் என்ற கொரோனா வைரஸ் திரிபு பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam