ரயிலும் வானும் விபத்துக்கு உள்ளானதில் விமானப்படை வீரர் பலி
களுத்துறை வடக்கு பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளார்.
ரயிலும் விமானப்படைக்கு சொந்தமான வானும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மற்றுமொரு விமானப்படை வீரர் காயமடைந்துள்ளார் என களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீரவில விமானப்படை முகாமில் கடமையாற்றி வந்த வெல்லவாய பிரதேசத்தை சேர்ந்த விமானப்படை வீரரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன் மொனராகலை புத்தல பிரதேசத்தை சேர்ந்த விமானப்படை வீரர் காயமடைந்துள்ளார்.
இன்று அதிகாலை 1.33 அளவில் களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுக்கொண்டிருந்ததுடன் விமானப்படை வான், கடற்கரையில் இருந்து காலி வீதி நோக்கி செல்வதற்காக ரயில் கடவை கடக்க முயன்ற போது ரயில், வான் மீது மோதியுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த விமானப்படை வீரர்கள் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் கூறியுள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
